LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel

Monday, March 19, 2007

கிரிக்கெட் - குட்டி கவுஜ!

சும்மா வேலை வெட்டி இல்லாம கொஞ்ச நேரம் கிடைச்சா, நீங்க என்ன பண்ணுவீங்க?
என்னாது... உருப்பிடியா ஏதாவது செய்வீங்களா? அப்போ தப்பான எடத்துக்கு வந்திருக்கீங்க. நான் என்ன செஞ்சிருக்கேன்னு பாருங்க:

கிரிக்கெட் - சில ஹைக்கூ கவிதைகள்
-------------------------------


1) அவன் ஒற்றைவிரலசைவை
உலகமே எதிர்பார்க்கும்
அம்பயர்
---


2) ஜெயிப்பது அவனா இவனா ?
"இருவருமில்லை, நான்தான்"
என்று தடையாய் வரும்
மழை
---


3) தோற்கப்போகும் அணிக்கே வெற்றி
கைகொடுப்பது கடவுளல்ல
டக்வர்த் லூவிஸ்*
---


4) ஸ்லெட்ஜிங்** கூத்தாடினாலும்
வெற்றியில் கண்
ஆஸ்திரேலியா
---


5) இந்திய அணிக்கு
வெற்றி மேல் வெற்றி
விளம்பரங்களில்
---


6) வேலி தாண்டல்தான்
ஆனாலும் வரவேற்கப்படுகிறது
சிக்ஸர்
---

*duckworth lewis
** Sledging

(நேரங்கெட்ட நேரத்தில மாட்ச் பார்த்து தூக்கம் போய், பாதி கிறக்கதுல உட்கார்ந்திருந்த நேரத்தில எழுதினது :)) )

Labels: ,

Tuesday, March 13, 2007

6. சுட்ட படம், சுடாத கவிதை - 3

படம்/கவிதை பெரிதாக தெரிய, படத்தை கிளிக் செய்யவும்
"சுட்ட படம், சுடாத கவிதை-1" படிக்க இங்கே கிளிக்கவும்.
"சுட்ட படம், சுடாத கவிதை-2" படிக்க இங்கே கிளிக்கவும்.




Labels: ,

Wednesday, March 7, 2007

4. சுட்ட படம், சுடாத கவிதை

சுட்ட படம், சுடாத கவிதை - 1
(படம் பெரிதாக தெரிய, படத்தை கிளிக் செய்யவும்.
Click on the pic to see clearly)


Labels: ,


 
Blog tracker