LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel

Thursday, February 12, 2009

உண்மை தேடல்

ஏதேதோ தேடி அலைந்திருந்த மனம்
பேராசை கொண்ட ஒரு நாள்
உண்மையைத் தேடத் துணிந்தது

தேடியலைந்த நான்
உண்மையென தன்னை அறிவித்த ஒன்றை
பற்றிக்கொண்டேன்

உண்மையைப் பற்றிக்கொண்டிருக்கும்
என் கைகள் தளரக்கூடும்
உண்மை நித்யம் நிலைக்கும்
என நினைத்திருந்தேன்

ஆனால் பற்றியிருந்த உண்மையின் பரப்புகளில்
சுருக்கங்கள் விழுந்த பொழுது
ஏமாற்றத்திற்கு அளவில்லை
பிறிதொன்றைப் பற்றும்வரை

உண்மை என நேற்று நினைத்தவைகள்
நீர்த் திரை பிம்பகளினும் வேகமாய்
உருமாறுவதைக் கண்டு
இன்று பற்றிக்கொண்டிருப்பவைகளின் மேல்
சந்தேக விரிசல்கள்

கணக்கற்ற முறை தேடித்தேடி
தேடல் மட்டுமே உண்மை என உணர்ந்த பின்
தேட முடியும் வரை
தேடுவதாய் முடிவு செய்துள்ளேன்

ஆனால் எதைத் தேடுவது?

Labels: ,

8 Comments:

  • ஹாஹா...... அருமைங்க... நீங்கள் உண்மையிலேயே எதையும் தேடிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.. ஏனெனில் தொலைத்தால்தானே தேடுவதற்கு??

    தேடலுக்கான பொருள் உங்களுக்கு அருகேயே இருக்கலாம்... எனது கவிதைகளில் நிசப்தம் தேடுவேன்.. ஆனால் அது என்னருகேயே இருப்பதைக் கவனிக்காமல் எங்கெங்கோ தேடிக் கொண்டிருப்பேன்...

    உண்மை, அல்லது பொய்,... எந்த தேடலுக்கும் முடிவு இல்லை.. ஏனெனில் முடிவற்ற பாதையின் பிள்ளைகளாகத்தான் தேடல்கள் இருக்கின்றன.

    By Blogger ஆதவா, At February 13, 2009 12:20 AM  

  • வருகைக்கு நன்றி ஆதவன் !

    //எனது கவிதைகளில் நிசப்தம் தேடுவேன்.. //

    அழகான தேடல்

    //ஏனெனில் முடிவற்ற பாதையின் பிள்ளைகளாகத்தான் தேடல்கள் இருக்கின்றன.//

    உண்மைங்க :)

    By Blogger Mani - மணிமொழியன், At February 14, 2009 8:04 AM  

  • தங்கள் கவிதை நன்றாகவுள்ளது.

    By Blogger முனைவர்.இரா.குணசீலன், At March 1, 2009 8:44 PM  

  • ரசித்ததற்கு நன்றி திரு.குணசீலன் !

    By Blogger Mani - மணிமொழியன், At March 3, 2009 7:56 PM  

  • HI Mani,
    I dont know how to type in Tamil,.....but your kavithai is just awesome.....i liked the concept of Enquiry!!!!!!!toooooo good.

    By Anonymous karthika, At October 10, 2009 9:34 PM  

  • Thanks Karthika :) !

    By Blogger Mani - மணிமொழியன், At October 11, 2009 1:49 PM  

  • nice

    By Blogger தியாவின் பேனா, At February 28, 2010 9:02 AM  

  • thanks Diya

    By Blogger Mani - மணிமொழியன், At February 28, 2010 11:20 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home


 
Blog tracker