LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel

Sunday, November 18, 2007

பயணம்

பாதங்கள் பட்டு புற்கள் மடிந்தத் தடம்
ஒற்றையடிப் பாதையானது

என் ஹெல்மெட் கண்ணாடியில் பட்டு
சிதறியதுண்டு ஒரு பட்டாம்பூச்சி

பதிந்த என் காலடித் தடத்தில் கண்டதுண்டு
சில நசுங்கிய நத்தைக்கூடுகளை

பயணமென்பது திசைகளும் பாதைகளும் மட்டுமல்ல
சில மரணங்களும்தான்

7 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home


 
Blog tracker