யாதும் ஊரே யாவரும் கேளிர்
(எனக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடல்)
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
Labels: கவிதை
5 Comments:
Do add your English poems too!.. and ofcourse you are not an empty vessel!
By Muranz, At March 14, 2007 at 5:27 PM
Muhil said...
//Do add your English poems too!.. //
வாங்க தோழி :)
இப்போதைக்கு தமிழ் மட்டும் போடலாம்னு இருக்கேன். என்ன ஆகுதுன்னு பார்ப்போம்.
By Mani - மணிமொழியன், At March 14, 2007 at 10:08 PM
Kallil ezhudhiyadhu pondra kavidhai!!! endrum vilangum unmai!!! Thanks for uploading this wonderful poem.
By Anonymous, At March 18, 2007 at 4:06 PM
வருக அனானி,
//Kallil ezhudhiyadhu pondra kavidhai!!! //
உண்மைதான், அதனால்தான் காலத்தை வென்று நிற்கிறது.
By Mani - மணிமொழியன், At March 19, 2007 at 2:16 AM
இந்த தலைப்பில் உள்ள எனது பதிவை படிக்க வரவேற்க்கிறேன்.www.velarasi.blogspot.com
By வேளராசி, At July 30, 2008 at 9:27 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home