சத்தங்களும் சுமையாகிப் போன ஒரு பொழுதில்
நீ என்னைக் காண வந்தாய்
அமைதியை விரும்பிய என் எண்ணத்தை
கண்டுகொண்டாய் நீ
அது எனக்கு பிடித்திருந்தது
புன்னகையோடு என் அருகே அமர்ந்தாய்
என் மௌனத்தோடு கலந்தது உன் மௌனம்
அதுவரை விரும்பிய அமைதியை விட
விருப்பமாகிப் போனாய் நீயெனக்கு
Labels: கவிதை, கவுஜ
2 Comments:
மெளனமே ஒரு கவிதை. இங்கே கவிதையாய் ஒரு மெளனம்.
By
ராமலக்ஷ்மி, At
May 21, 2008 4:31 AM
வருக ராமலக்ஷ்மி.
ஹைக்கூவாய் உங்கள் பின்னூட்டம் !
By
Mani RKM, At
May 21, 2008 7:07 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home