LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel

Friday, May 11, 2007

சில ஹைக்கூ கவிதைகள்

மக்களே வணக்கம் வணக்கம் !
இங்கன வந்து ஒரு ஸ்மால் (small) அடிச்சுட்டுப் போங்க.
ஹிஹி என்னுடைய குட்டி ஹைக்கூ கவிதைகளத்தான் ஸ்மாலுன்னு சொன்னேன்...


1)
காலத்தோடு இணைந்து நடக்க
நொடிக்கு நொடி துடிக்கும் காதலன்
கடிகாரம்

2)
இதழே திறக்காமல்
கவிதை சொல்கிறாள்
புன்னகை


3)
சோம்பலின் களையா? சோகத்தின் முள்ளா?
காட்டும் கண்ணாடிக்குத் தெரியவில்லை
தாடி

4)
தமிழன் பொய் வெளிச்சத்தில்
தேர்ந்தெடுக்கிறான் தலைவர்களை
சினிமா


5)
நடக்காத ஏக்கங்கள் எழுந்து
தூக்கத்தில் நடக்கின்றன
கனவு

Labels: ,

10 Comments:

  • கனவு
    புன்னகை
    தாடி
    நல்லாயிருக்கு!

    By Blogger சினேகிதி, At May 11, 2007 12:42 PM  

  • வருகைக்கு நன்றி சினேகிதி

    //கனவு
    புன்னகை
    தாடி
    நல்லாயிருக்கு! //

    சந்தோஷம் !

    By Blogger Kovai Mani - கோவை மணி, At May 12, 2007 1:51 AM  

  • அண்ணாத்தே, ஸ்மாலு கொஞ்சம் சப்புன்னுகீதே... ஏதுனா டூப்ளிகேட்டா அல்லாங்காட்டி மிக்ஸிங் சாஸ்தியா...?

    By Blogger செல்வேந்திரன், At May 12, 2007 7:09 AM  

  • //புன்னகை//

    நல்லாயிருக்கு

    By Blogger Visaagan, At May 13, 2007 4:26 AM  

  • //செல்வேந்திரன் said...
    அண்ணாத்தே, ஸ்மாலு கொஞ்சம் சப்புன்னுகீதே... ஏதுனா டூப்ளிகேட்டா அல்லாங்காட்டி மிக்ஸிங் சாஸ்தியா...?
    //

    கிக்கு ஏத்த என்ன பண்ணனும்னு சொல்லுங்களேன்.
    எல்லா பதிவையும் படிச்சிட்டு விரிவா விமர்சனம் சொன்னா நல்லா இருக்கும்.

    By Blogger Kovai Mani - கோவை மணி, At May 18, 2007 1:33 AM  

  • //Visaagan said...
    //புன்னகை//

    நல்லாயிருக்கு
    //

    நன்றி விசாகன் !

    By Blogger Kovai Mani - கோவை மணி, At May 18, 2007 1:34 AM  

  • ungal vidukathaigal nalla irukkuthu

    By Anonymous Anonymous, At May 18, 2007 2:30 AM  

  • //Anonymous said...
    ungal vidukathaigal nalla irukkuthu
    //

    ஹைக்கூவை விடுகதைனு சொல்லீட்டீங்களே... :))

    By Blogger Kovai Mani - கோவை மணி, At May 18, 2007 3:58 AM  

  • \\இதழே திறக்காமல்
    கவிதை சொல்கிறாள்
    புன்னகை
    \\

    அருமை :))

    \\தமிழன் பொய் வெளிச்சத்தில்
    தேர்ந்தெடுக்கிறான் தலைவர்களை
    சினிமா
    \\

    இது இந்தியர்களுக்கே பொருந்தும்னு நினைக்கிறேன்

    By Blogger Ramya Ramani, At July 19, 2008 3:07 PM  

  • //Blogger Ramya Ramani said...

    \\இதழே திறக்காமல்
    கவிதை சொல்கிறாள்
    புன்னகை
    \\

    அருமை :))//

    ரசித்ததிற்கு நன்றிங்கோவ்

    By Blogger மணிமொழியன், At July 20, 2008 7:44 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home


 
Blog tracker